தேசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப் காஞ்சிபுரம் வீரர்கள் அசத்தல்

தேசிய பாக்ஸிங் சாம்பியன்ஷிப் காஞ்சிபுரம் வீரர்கள் அசத்தல்

பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்.ஏ., பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில், பயிற்சியாளர் தலைமையில், 10 பேர் இப்போட்டியில் பங்கேற்று, ஒரு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்றனர்
தமிழ்நாடு ரிங் பைட் அசோசியேஷன் சார்பில், தேசிய அளவிலான 'ஆல் இந்தியா ஓபன் நேஷனல் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்' போட்டி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நடந்தது. இதில், புதுடில்லி, ஹரியானா, சண்டிகர், ஆமதாபாத் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்.ஏ., பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில், பயிற்சியாளர் நுார் முஹமது தலைமையில், 10 பேர் இப்போட்டியில் பங்கேற்று, ஒரு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்றனர். இதில், சப் - ஜூனியர் பிரிவில் ரணதீரன் தங்க பதக்கமும், ஜெய்விக், வர்ஷா வெள்ளி பதக்கமும் பெற்றனர். சீனியர் பிரிவில் வெற்றிவேல், ஹரிஹரன் வெள்ளி பதக்கமும், சந்திரசேகர், சதீஷ், பார்த்திபன், சுதர்சன் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், வேலம்மாள் போதி கேம்பஸ் முதல்வர் சுரேஷ்குமார், தனியார் நிறுவன உரிமையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். சிறந்த பயிற்சியாளர் மற்றும் சிறந்த பாக்ஸருக்கான விருது, காஞ்சிபுரம் என்.ஏ, பாக்ஸிங் அசோசியேஷனுக்கு வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story