தேசிய சதுரங்க போட்டி - 800 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தேசிய சதுரங்க போட்டி  - 800 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சதுரங்கம் 

வேலூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் 800 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம்,அரியூர் நாராயணி தங்ககோவில் வளாகத்தில் நேற்று மாலை, 67 ஆவது தேசிய அளவிலான மாணவ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் 14,17,19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மாணவ,மாணவிகளுக்கான சதுரங்க போட்டியினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார் .

இதில் நாடு முழுவதுமிருந்து 32 மாநிலங்களை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இந்த சதுரங்க போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறார்கள். வரும் 30 ஆம் தேதி வரையில் ஐந்து நாட்கள் நடக்கிறது. இவ்விழாவில் கல்விதுறை இணை செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பல பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் நவோதயா பள்ளி மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வரும் 30 தேதி வரை நடைபெறுகிறது. 14,17 ,19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுவதாக கூறினார். ஒவ்வொரு பிரிவிலும் முப்பது வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்திலிருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்றும் மாணவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பரிசுகளை வழங்கும் என தமிழக அரசு தெரிவித்து இருப்பதாக ராமகிருஷ்ணன் கூறினார்.

Tags

Next Story