தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

குழந்தைகள் அறிவியல் மாநாடு

திண்டுக்கல்லில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இந்த ஆண்டிற்கான 31வது மாவட்ட மாநாடு நேற்று திண்டுக்கல் ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டது. அதில் மண்டல அளவில் மாநாட்டிற்கு 13 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. நமது இராம்சன்ஸ் பள்ளி மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகளில் 2 ஆய்வுக் கட்டுரைகள் நவம்பர் 5ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நமது பள்ளி சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரைகள் 117. இதில் தேசிய அளவில் 9, மாநில அளவில் 17, மாவட்ட அளவில் 44 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பத்மேஸ்வரி, ஆசிரியை வழிகாட்டுதலின்படி பதினோராம் வகுப்பு மாணவர் சித்தார்த் தலைமையில் அஸ்வந்த் குழு "கரந்தமலையின் சுற்றுப்புறங்களில் உள்ள கோயில்காடுகள் மற்றும் மூலிகைச் செடிகள் பற்றிய ஆய்வு" என்ற தலைப்பிலும், வழிகாட்டி ஆசிரியர் திருமதி.வாணி தேவி, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சிவப்பிரகாஷ் தலைமையில் அரசுராஜ் குழு "பலவகை மூலிகைகளைப் பாரம்பரிய முறையில் தயார் செய்து கால்நடைகளுக்கு (கறவை மாடுகள்) வரும் ஒட்டுண்ணி தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக் கட்டுரைகள் மண்டல மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story