கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரியில் தேசிய மாநாடு

கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரியில் தேசிய மாநாடு நடைபெற்றது.

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவ கல்லூரியின் நுண்ணீரியல் துறை சார்பில் ரியாம்கான் 2023 என்ற தலைப்பில் நுண்ணுயிர் எதிர்ப்புகளுக்கான தேசிய மாநாடு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த தேசிய மாநாட்டிற்கு கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர்.ஞானகுரு தலைமை தாங்கினார். நுண்ணுயிரியல் துறை துணைப் பேராசிரியர் டாக்டர். லட்சுமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை டீன் டாக்டர் நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். முன்னதாக நுண்ணுயிரியல் துறை மருத்துவ கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். அர்ஷியா பேகம் பேராசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story