தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடைபெற்றது.

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடைபெற்றது.

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தேசிய டெங்கு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஷீனா மும்தாஜ் கலந்து கொண்டு டெங்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில், துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் தனசேகர், டாக்டர் ஜெயபாலன், அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story