தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

டெங்கு விழிப்புணர்வு 

தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை ஊராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வல்லநாடு மற்றும் கிள்ளிக்குளம் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மணக்கரை ஊராட்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடெங்கு நோய் எதனால் பரவுகிறது அதை தடுக்கும் முறைகள் பற்றி பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் கூறுகையில், வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்குமாறும் வீட்டின் சுற்றுப்புறத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் டயர்கள் குறைந்த மண்பாண்டங்கள் தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை திறந்தவெளியில் கிடைக்காதவாறு அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

இவைகள் திறந்தவெளியில் கிடந்தால் மழை பெய்து அதில் மழை நீர் தேங்கும் பொழுது ஏடிஸ் கொசு அதில் முட்டையிட்டு கொசு உற்பத்தையாவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகும் என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தற்போது வெயில் காலமாக இருந்தாலும் கிடைக்கும் தண்ணீரை மூடி வைக்கவும் அதில் கொசு முட்டையிடாத வண்ணம் மூடி வைக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மணக்கரை ஊராட்சியில் வீடு வீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொசு புழு ஒழிப்பு பணிகள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் டெங்கு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மணக்கரை ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சல சீனிபாண்டியன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள், கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags

Next Story