தேசிய குடற்புழு நீக்கும் முகாம் : ஆட்சியர் தகவல்

தேசிய குடற்புழு நீக்கும் முகாம் : ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்.9, மற்றும் 16ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய குடற்புழு நீக்கும் முகாம் 09.02.2024 அன்றும் விடுபட்டவர்களுக்கு 16.02.2024 அன்றும் நடைபெற உள்ளது. இம்முகாமில், ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் 20-வயது முதல் 30 வயதுடைய தாய்மார்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் தாய்பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல் - Tab.Albendazole) வழங்கப்பட உள்ளது.

குடற் புழு நீக்க மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் தாய்மார்களுக்கும் கொடுப்பதன் முலம் குடலில் உள்ள புழு தொற்று நீங்குவதுடன் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் குடற்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, வாந்தி , சோர்வு மற்றும் படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4,48,566 குழந்தைகளுக்கும் மற்றும் 1,10,452 தாய்மார்களுக்கும் அல்பென்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

இந்ந முகாம் 1583 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 219 தனியார் பள்ளிகள், 91 கல்லூரிகள் மற்றும் 1477 அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொது சுகாதாரத் துறை, பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், ஊராட்சி துறை மற்றும் நகர்புறப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே பயனாளிகள் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொள்கிறார்."

Tags

Next Story