நாகையில் பிப்.9 ல் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வருகின்ற 09.02.2024 அன்று அனைத்து 1 முதல் 19 வயது குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் அல்பண்டோசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் 09.02.2024 அன்று விடுபட்ட அனைவருக்கும் 16.02.2024 அன்று வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயது உடையவர்களுக்கு அல்பண்டோசோல் /½ மாத்திரை (200 அப), 2 முதல் 19 வயதுடைய குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கு அல்பண்டோசோல் 1 மாத்திரை (400 அப) வழங்கப்படுகிறது.
நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் (தொடக்கப்பள்ளி-439, நடுநிலைப்பள்ளி-116, உயர்நிலைப்பள்ளி-67, மேல்நிலைப்பள்ளி-79) மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், 633 அங்கன்வாடி மையங்கள், 13 பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயதுடைய 2,13,310 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 45,244 மகளிருக்கும் மொத்தம் 2,58,544 நபர்களுக்கு அல்பண்டோசோல் மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமினை அனைவரும் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்த ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.