காவிரியாற்றில் தேசிய பேரிடர் மீட்புனர் ஒத்திகை

சங்ககிரியில் காவிரியாற்றில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஒத்திகை நடந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம், காவேரிப்பட்டி, ஆத்தங்கரை பதில்களில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்கிக் கொண்டு தவிப்புகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொது மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் , காவேரிப்பட்டி காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககிரி தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் பருவமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் பொது மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்தும்.

அதேபோல் பொதுமக்கள் வீட்டில் உள்ள தண்ணீர் கேன், டயர் டியூப் உள்ளிட்டவைகளை கொண்டு எவ்வாறு மீட்பது என்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். அப்போது சங்ககிரி வட்டாட்சியர் ஜெயக்குமார், தேவர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்முருகன், கருப்பண்ணன், செந்தில்குமார், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story