தேசிய பேரிடர் மீட்புக்குழு பயிற்சி விளக்க கூட்டம்

தேசிய பேரிடர் மீட்புக்குழு பயிற்சி விளக்க கூட்டம்

தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுத்தல் தொடர்பான பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுத்தல் தொடர்பான பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) 4-வது பட்டாலியன் டெபுடி கமாண்டர் இடிந்த மற்றும் சரிந்த கட்டிடங்களின் உள்ளே சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்டெடுத்தல் (COLLAPSED STRUCTURE SEARCH AND RESCUE) தொடர்பான பயிற்சி விளக்க கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) 4-வது பட்டாலியன் டெபுடி கமாண்டர் இடிந்த மற்றும் சரிந்த கட்டிடங்களின் உள்ளே சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்டெடுத்தல் (COLLAPSED STRUCTURE SEARCH AND RESCUE) தொடர்பான பயிற்சி விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழு (NDRF) 4-வது பட்டாலியன் டெபுடி கமாண்டர் இடிந்த மற்றும் சரிந்த கட்டிடங்களின் உள்ளே சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்டெடுத்தல் தொடர்பான பயிற்சி விளக்க கூட்டத்தில், தீயணைப்புத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பலதுறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பேரிடர் தொடர்பான பயிற்சி குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்; (CSSR) மாதிரி ஒத்திகைப் பயிற்சி அரக்கோணம், டெபுடி கமாண்டர், 4-வது பட்டாலியன் பிரிவு அவர்களால் நடத்தப்படவுள்ள பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, துணை கமாண்டர் கெய்வாட் சங்கீத் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story