மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை.

மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை.
மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் தண்ணீர் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதிய புயலாக மாறக்கூடும் எனவும் இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளதால் இங்கு கன மழை பெய்தால் ஓங்கூர்ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையோரம் இருக்கும் கிராம மக்கள் பெரும் பாதிப்பு உண்டாகும் நிலை உள்ளது.

எனவே கனமழை மற்றும் புயலால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் பொருட்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்கள் மரக்காணம் வந்துள்ளனர். இவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story