தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரையில் நடந்த தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா பங்கேற்று பள்ளி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு வழங்கினார்.

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை ஒய்.பிரிஜிட் ரீட்டா மேரி தலைமை தாங்கினார். ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர். எஸ்.பெரியசாமி முன்னிலை வகித்தார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் முன்னிட்டு சட்டம் சார்ந்த விழிப்புணர்வை கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். ஊத்தங்கரை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் பெண் கல்வியின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் த.பிரபாவதி, வழக்கறிஞர்கள் கோமதி, பவித்ரா, அனுஷா ஆகியோர் பெண்களுக்குரிய சட்ட பாதுகாப்பு மற்றும் உரிமைகளை எடுத்துரைத்தனர்.

முன்னதாக தேசியப் பெண் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா மற்றும் உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.மூர்த்தி, வழக்கறிஞர்கள் என்.பெருமாள், லட்சுமணன், அருள், தமிழ்மணி, தமிழ் அமுதன், நந்தகுமார், குணசீலன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன், வட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு சார்ந்த லாவண்யா, பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தார்கள்.

Tags

Next Story