தென்காசியில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி
விழிப்புணா்வுப் பேரணி
ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வார நிறைவு நாளான வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதையொட்டி, ஆட்சியா் கூட்ட அரங்கில் தமிழ் சாா்ந்த கிராமிய கலைநிகழ்ச்சிகளான தப்பாட்டம், சிலம்பாட்டம் நடைபெற்றது. இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். பழைய பேருந்து நிலையம் வழியாக இப்பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் திருநெல்வேலி மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் சுந்தா், தமிழ் வளா்ச்சித் துறைப் பணியாளா்கள், வணிக நிறுவன சங்க நிா்வாகிகள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். தென்காசி வா்த்தக சங்கத் தலைவா் மு. அப்துல் அஜிஸ், செயலா் பரமசிவன், வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் ஆ. பரமசிவன், பொருளாளா் ரசூல்தீன், செயற்குழு உறுப்பினா் பரமசிவன், சாகுல்ஹமீது, ராஜா, மாரியப்பன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ரா. ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Next Story