தேசிய சட்டசேவைகள் தின விழிப்புணர்வு பேரணி - நீதிபதிகள் துவக்கி வைப்பு

தேசிய சட்டசேவைகள் தின விழிப்புணர்வு பேரணி - நீதிபதிகள் துவக்கி வைப்பு

விழிப்புணர்வு பேரணி 

தேசிய சட்ட சேவைகள் தின விழிப்புணர்வு பேரணியை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல்,மாவட்ட உரிமையியல் நீதிபதி அமர் ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பு அமர்வு நீதிமன்றம் எதிரே நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் நடந்த சட்ட சேவை தின விழிப்புணர்வு மற்றும் தீபாவளி விழிப்புணர்வு பேரணியை சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல்,மாவட்ட உரிமையியல் நீதிபதி அமர் ஆனந்த் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் பட்டாசுகளை கடையில் வாங்கிச் செல்லும் போது மிகவும் கவனமுடன் எடுத்துச் செல்ல வேண்டும், பட்டாசுகளை சமையல் அறைகளில் சேமித்து வைக்க கூடாது, பேருந்து நிலையம், கேஸ் குடோன்,பெட்ரோல் பங்க், மருத்துவமனை அருகாமையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்க கூடாது, நம் உடலும் மனமும் பாதித்து காது கேட்கும் திறன் குறைந்து விடும், வெடிக்காத பட்டத்துகளை எக்காரணத்தைக் கொண்டும் கைகளில் தொடக்கூடாது போன்ற பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்தப் பேரணியில் ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் நிர்வாகிகள் பெருமாள், தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர்கள் செந்தில், லட்சுமி, கவிதா, மற்றும் ஜேஆர்சி, என்எஸ்எஸ், சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story