சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

தேசிய அளவிலான கருத்தரங்கம்

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் சோனா கல்லூரி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயர்ஸ் இந்தியா சார்பில் 2நாட்கள் நடந்தது.
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சோனா கல்லூரி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினீயர்ஸ் இந்தியா சார்பில் இந்தியாவில் வெள்ள மேலாண்மை மற்றும் தணிப்பு உத்திகள், வலிமையை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் பேராசிரியர்கள், மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கம் 2 நாட்கள் கல்லூரி கலையரங்கில் நடந்தது. சோனா கல்வி குழுமங்களின் தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். ஆந்திரா ஜல் சக்தி அமைச்சக நதி மேம்பாடு, கங்கை புனரமைப்புத்துறை, நீர்வளத்துறை கோதாவரி நதி மேலாண்மை வாரிய உறுப்பினர் அழகேசன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். சோனா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் 7 தலைப்புகளில் 110-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமர்ப்பித்தனர். இந்த கட்டுரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஸ்டேட் சென்டரின் கவுரவ செயலாளர் என்ஜினீயர் கோகுல், ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story