சிவகாசி கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் !

சிவகாசி கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம் !

கருத்தரங்கம்

சிவகாசி கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கம்.ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி P.S.R பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் 150-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டது. இவற்றில் இருந்து 75 சிறந்த கட்டுரைகளை சிறப்பு வல்லுனர் குழுவினர்களால் தேர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கல்லூரி இயக்குனர்கள் டாக்டர் அருண்குமார்,விக்னேஷ்வரி அருண்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.டீன் மாரிச்சாமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போது இந்தியன் ரயில்வே துறையில் பணிபுரியும் என்ஜினியர் தாமரைச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.தேசிய கருத்தரங்கின் முக்கிய நிகழ்வான ஆய்வு தொகுப்பு புத்தகம் சிறப்பு விருந்தினர் தாமரைச்செல்வன் வெளியிட்டார். இதில் பல்வேறு கல்லூரியில் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. சிறந்த கட்டுரைக்கான பரிசுகளை கல்லூரி சார்பாக எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி வழங்கினார். விழாவின் நிறைவாக எந்திரவியல் துறை பேராசிரியர் பிச்சிப்பூ நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story