தேசிய கணித நாள் விழா
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்
தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கணித நாள் விழா நடைபெற்றது.
சேலம் தீரஜ்லால் காந்தி தொழில் நுட்பக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜர் பிறந்தநாளையொட்டி தேசிய கணிதநாள் விழாவை கொண்டாடும் நோக்கில் கட்டுரை, வினாடி-வினா மற்றும் குறும்பட போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசு வென்றனர். மேலும் கணித வினா விடை புத்தகம் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்லூரியின் ஐ.எஸ்.ஆர். செல் மூலம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், சமுதாய பொறுப்புணர்வோடு அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் கணித வினா- விடை புத்தகம் கல்லூரியின் இணையதளம் www.dgct.ac.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பிளஸ்-2 தேர்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்ற கல்லூரியின் சார்பில் வாழ்த்துக்கள் என்றார்.
Next Story