தேசிய ஊசு போட்டி - நத்தம் மாணவர் சாதனை

தேசிய ஊசு போட்டி -  நத்தம் மாணவர் சாதனை
X

மாணவர் யஷ்வந்த் சஞ்சய்

அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஊசு (தற்காப்பு கலை) போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்ற நத்தம் என்.பி.ஆர்.கல்லூரி மாணவர் யஷ்வந்த் சஞ்சய் வெண்கல பதக்கத்தை வென்றார்.
அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஊசு (தற்காப்பு கலை) போட்டி ஜம்மு காஷ்மீரில் நடந்தது. இந்த போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நத்தம் என்.பி.ஆர்.கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் மாணவர் யஷ்வந்த் சஞ்சய் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய அவர் 3 ஆம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.இதனையடுத்து சாதனை படைத்த யஷ்வந்த் சஞ்சய்க்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.இதற்கு என்.பி.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மருது கண்ணன் தலைமை தாங்கினார்.இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர் யஷ்வந்த் சஞ்சையை பாராட்டினர்.

Tags

Next Story