பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஆறு குழுக்கலாக அமைக்கப்பட்டு, அதில் பெரம்பலூரில் மாவட்ட நீதிபதி இந்திராணி மகிளா நீதிமன்றம் மற்றும் சார்பு-நீதிபதி அண்ணாமலை சார்பு நீதிமன்றம் ஒரு குழுவாகவும்.

மேலும் பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஷ்வர் தாலுக்கா நீதிமன்றங்களில் குன்னம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதித்துறை நடுவர் கவிதா தலைமையில் ஒரு குழுவாகவும் மற்றும் வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம் தலைமையில் ஒரு குழுவாகவும் அமைக்கப்பட்டு மேலும் இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதியுடன் ஒவ்வொரு வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் நீதிமன்றங்களில் உள்ள வருவாய்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி 862 வழக்குகள் முடிவுற்றது. மோட்டார் வாகன விபத்து. காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை 65,70,250 ரூபாய், உத்தரவிற்கான ஆணை தேசிய மக்கள் நீதிமன்றம் முன்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் வழங்கினார்.

இதில் வழக்கறிஞர்கள், வழக்காடிகளும், எதிர்வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு-நீதிபதியுமாகிய சந்திர சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story