ஆத்தூர் : தேசிய மக்கள் நீதிமன்றம்

ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் சட்ட பணிகள் குழு சார்பில் 816 வழக்குகளுக்கான சமரச தீர்வு வட்ட சட்டை பணிகள் குழு தலைவர் நீதிபதி ஆனந்தன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்ட பணிகள் குழு ஆத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வழக்குகளில் உள்ள மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகிய இருதரப்பினரையும் அழைத்து சமரசம தீர்வு காணப்பட்டு வருகிறது. அதில் குடும்ப நல வழக்குகள், மற்றும் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த வழக்குகள் விபத்து வழக்குகள், வங்கிகள், குடும்ப நலம், சொத்து உள்ளிட்ட 816 வழக்குகளுக்கும் சமரச தீர்வு நடைபெற்று வருகிறது. இதில் வட்ட சட்ட பணிகள் குழுத்தலைவர் நீதிபதி ஆனந்தன், கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, ஒன்னாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண்குமார், விரைவு நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்னவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடுகளும் இந்த இலவச வட்ட சட்டப் பணிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story