தர்மபுரியில் ஜூன் 8-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகின்ற 8ம் தேதி நடக்க உள்ளதாக தர்மபுரி மாவட்ட முதன்மை நிதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர் மணிமொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,மாவட்ட அளவில் நீதிமன் றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து கு முடிக்க ஏதுவாகதேசிய சட்ட பணிகள் ஆணை குழுவின் உத்தரவின்படியும், சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் படியும் ஜூன் மாதம் 8-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகிற ஜூன் / மாதம் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு அந்தந்த மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் மதியம் 2 மணிக்குமேல் நடைபெற் உள்ளது.இதைதொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 8-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கும்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக் கூடியமோட்டார்வாகன விபத்து வழக்குகள் காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாரா கடன்,வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வழக்குகள் ஆகியவற்றிற்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படஉள்ளது.எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவை யில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்துக் கொள்ளலாம். தேசிய மக்கள் நீதி மன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணம் வழக்குதாரர்களுக்கு திருப்பி தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story