தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி

தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி கிருஷ்ணகிரி ஆட்சியர் துவங்கி வைத்தார்.
தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் துவங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக தேசிய மின்சிக்கன வார விழாவையொட்டி, தேசிய மின்சிக்கன வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேருந்து நிலையம் பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பேருந்து நிலையம் பகுதியில் அதி நவீன எல்இடி வாகனம் மூலம் மின் சிக்கனம் குறித்து குறும்படம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், மின்சாரத்துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story