தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா - மக்களுக்கு விழிப்புணர்வு..
மனித வாழ்வின் மகத்துவம் இயற்கையை பாதுகாப்பதில் இணைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக பள்ளியில் பசுமைப்படை குழுவின் சார்பில் பள்ளித்தோட்டம் மாணவ மாணவிகள் அமைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இயங்கிவரும் வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில், தேசிய பசுமைப்படை குழுவின் சார்பில் பள்ளித்தோட்டம் அமைக்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளியின் தலைவர் முனைவர் G.வெற்றிச்செல்வன் அவர்கள் மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இந்நிகழ்வில் பங்கேற்று, காய்கறி மற்றும் கீரைவகை விதைகளின் நடவினைத் தொடங்கி வைத்து, பசுமைப்படை முற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் அவர்களின் சீரிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். பள்ளியின் முதல்வர் சுதா ரமேஷ், தோட்டப் பராமரிப்பிற்கான வழி வகைகளைத் தெரிவித்து, தனது வாழ்த்துகளை மாணவ, மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். பள்ளியின் முதல்வர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாணவ,மாணவிகளை ஒருங்கிணைத்து செயல்பாடுகளுக்கு உதவிசெய்தார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.