தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம்
தேசிய அறிவியல் தினம்
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விக்சித் பாரத்க்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, புதன்கிழமையன்று, இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும், 'விக்சித் பாரத்க்கான' புதுமைகளின் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு கொண்டாப் பெற்றது. இவ்விழாவிற்கு, கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் செ.காயத்ரி முன்னிலை வகித்தார். இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை அறிவயல் கல்லூரியின் உதவிப்பேராசிரியருமான முனைவர் ஏ.சுகுமாரன் கலந்து கொண்டு, மாணவிகள் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி, மாசு குறைப்பு மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைத்திருந்த கோளரங்கம், கையடக்க கூடாரம், பசுமை வீடு மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் போன்ற காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டு பாராட்டினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை அறிவியல் துறைசார் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஒருங்கிணைத்திருந்தனர்.

Tags

Next Story