தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

தேசிய அறிவியல் தினம் 

படந்தாலுமூட்டில் தனியார் கல்வியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்.
கன்னியாகுமாரி மாவட்டம் படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்பட்டது. கல்லூரியின் பாடகர் குழுவினரால் இறைவாழ்த்து பாடப்பட்டது. மாணவ ஆசிரியர் பிரவீனா வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் திருமதி கீதா பான்ஸ் தலைமையுரையாற்றினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஹெலன் பிறேம லதா முன்னிலை வகித்தார். கல்லூரியின் நிர்வாகி மத்தியாஸ் துவக்க வுரையாற்றினார். சிறப்பு விருந்தினரை பேராசிரியை ரோஸ்லின் ஷீபா ராணி அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கிரேஸ் கல்லூரியின் ரேடியாலஜி துறை பேராசிரியர் திருமதி. ஜிஜி மலர் கலந்து கொண்டார். தேசிய அறிவியல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ ஆசிரியர்கள் அனுஷா, மாயமனோஜ், டெசி டெரன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவ ஆசிரியர்கள் அனுஷா மாயா மனோஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் நிகழ்ச்சிகளை மாணவ ஆசிரியர் ஹரிதா தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story