குமாரபாளையத்தில் அரசு கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் !
தேசிய அறிவியல் தின விழா
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி பொருளாதாரத்துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி பொருளாதாரத்துறை சார்பில் தேசிய அறிவியல் தினம் மற்றும் பொருளாதாரத்துறை மன்றம் துவக்க விழா முதல்வர் (பொ) அருணாச்சலம் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியை அனுராதா பங்கேற்று பேச்சு, கட்டுரை, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். முதல்வர் அருணாச்சலம் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு கல்வி, மருத்துவம், மற்றும் வேளாண்மை துறையில் புதிய தொழில்நுட்பத்துடன் பங்காற்றி வருகிறது. செயற்கை கோள்கள் ஏவுவதில் விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் வெற்றி, 5ஜி தொலை தொடர்பு வளர்ச்சி இந்திய சாதனைகள் ஆகும். தற்போது நமது இந்தியா சூரிய ஒளியினால் பெறக்கூடிய ஆற்றல் (சோலார் ) மற்றும் காற்றாலையால் கிடைக்கும் சக்தி இவற்றின் மூலம் பல்வேறு தொழில்கள் மேம்படுகிறது. ஒரு நாடு விவசாயம் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் நல்வாழ்வு தகவல் தொழில்நுட்பம் இவற்றில் தனித்துவம் பெற்று தன்னிச்சையாக செயல்பட்டு வந்தால் நிச்சயம் வளமிக்க நாடாக நாம் நாடு உருவாகும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் பேசினார். பொருளாதாரத்துறை மன்றம் துவக்க விழாவையொட்டி புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். உதவி பேராசிரியர்கள் சின்னப்பராஜ், ஸ்ரீபாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story