தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கண் ஒளியியல் பிரிவு தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.


அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கண் ஒளியியல் பிரிவு தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் கண் ஒளியியல் பிரிவின் மூலம் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல் நிகழ்ச்சி கல்லூரியில் நடந்தது.

துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், சென்னை புதுமை கண்டுபிடிப்பு மையத்தின் நிறுவனர் மகேஷ்வரி சீனிவாசன், பெங்களூரு செயற்கை கற்றல் அமைப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரமேஷ், ரெமிடோ நிறுவனத்தின் மூத்த கண் ஒளியியல் பிரிவு நிபுணர் விக்னேஷ், சேலம் ட்ரூ லைன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், தொழிற்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும், மாணவர்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு சமர்ப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்சுடர் மற்றும் பேராசிரியை வெண்ணிலா, உதவி பேராசிரியர்கள் பானு, சவுந்தர்யா, மெய்பிரபு, ராம்பிரசாத், திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story