கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய அளவிலான மொழி மற்றும் இலக்கியம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான மொழி மற்றும் இலக்கியம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவி சக்திபிருந்தா வரவேற்றார். சிங்கப்பூர் வெளிப்படை அரங்க இயக்குனர், புதுவை பல்கலைக் கழக பண்பாட்டு தொடர்பு நிறுவன ராமசாமி, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி உதவிப்பேராசிரியர் சபிதா ஆகியோர் நாடக நுணுக்கங்கள், கலையினை வடிவத்திற்கு கொண்டு வரும் திறன், செய்கை மொழி பார்ப்போரை கவரும் வகையில் நடிப்பு போன்றவை குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர்கள் கவிதா, மகேஸ்வரி, சுரேந்திரன், கோவிந்தன், சண்முகசுந்தரம், ஹேமலதா, ரோஷினி, செந்தமிழ், அருண்குமார் மற்றும் சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.