விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய கருத்தரங்கு !

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய கருத்தரங்கு !

சேலம்

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகம் மற்றும் சென்னை அறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்கவியல் மற்றும் அறுவை அரங்க பிரிவின் மூலம் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் சுதிர் தலைமை தாங்கினார்.

துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து, கல்லூரி மற்றும் மயக்கவியல் துறையின் செயல்பாடுகள், சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையின் மூத்த மயக்கவியல் துறை ஆலோசகர் டாக்டர் குமரேசன், மங்களூரு எனபோயா அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் உதவி பேராசிரியர் அபிஷேக், உதவி பேராசிரியை அபூர்வா ஷெட்டி, கதார் நஸிம், சுகாதார துறை மூத்த மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் மகேஷ்குமார் ஆகியோர் பேசினர். சென்னை ஸ்ரீலட்சுமி சர்ஜிகல் நிறுவனம் மூலம் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தரங்கில் மாணவர்களுக்கான படவிளக்க காட்சி, ஆராய்ச்சி கட்டுரை, வினா- விடை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள், தொழில்நுட்வியலாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துறையின் மயக்கவியல் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்க பிரிவு மாணவர்கள் அறுவை அரங்க உபகரணங்களை ஆய்வகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினர். ஏற்பாடுகளை துறையின் மயக்கவியல், அறுவை சிகிச்சை பிரிவு உதவி பேராசிரியர்கள் உமாமகேசுவரி, விக்ேனஷ்வர், முத்தமிழ் செல்வன், திவ்யா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story