இளையான்குடியில் ஆராய்ச்சி வணிகவியல்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம்

இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை சார்பாக "டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பம் வளர்ச்சி - வாய்ப்புகள் மற்றும் சவால்கள்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றி கருத்தரங்க புத்தகத்தை வெளியிட்டார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். முதல் அமர்வில் உதவிப்பேராசிரியர் பௌசியா சுல்தானா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரி, நிறுவன செயலாண்மை துறை, இணைப்பேராசிரியர் சாகுல் ஹமீத் கலந்து கொண்டு "டிஜிட்டல் பரிவர்த்தனை - நுணுக்கங்கள்" என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். உதவிப்பேராசிரியர் நசீர் கான் ஒருங்கிணைத்தார். இரண்டாம் அமர்வில் உதவிபேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்புவிருந்தினராக திருச்சிராப்பள்ளி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல்துறை, மூத்த பேராசிரியர் இராமச்சந்திரன் "பொருட்களை சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு" குறித்து பேசினார். இரண்டாம் அமர்வை உதவிப்பேராசிரியர் நாசர் ஒருங்கிணைத்தார். நிறைவு விழாவில் மாலதீவு, அரசு கல்வியியல்துறை, வணிக மேலாண்மைத் துறைத்தலைவர், ராஜேந்திரன் நிறைவு விழா உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் நன்றி கூறினார். நிறைவு விழாவை உதவிப்பேராசிரியர் அப்துல் முத்தலீப் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story