கந்தசாமி கண்டர் கல்லூரியில் தேசிய பொருளாதார கருத்தரங்கு

தேசிய பொருளாதார கருத்தரங்கு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியின் முதுகலை & பொருளாதார ஆராய்ச்சித் துறை சார்பில் 75 ஆண்டு கால இந்தியப் பொருளாதாரத்தின் சாதனைகள், வாய்ப்புகள், சவால்கள் என்ற தலைப்பில் ICSSR நிதியுதவியுடன் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பெங்களூரு பல்கலைக் கழக பொருளாதாரப் பேராசிரியர் எஸ்.ஆர்.கேசவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், சேலம் பெரியார் பல்கலைக் கழகப் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் கே.ஜெயராமன் தொடக்கவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் கந்தசாமி கண்டர் கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் மருத்துவர் ர.சோமசுந்தரம், எஸ்.டி.என்.மகேந்திர மணி, நிர்வாக அலுவலர் முனைவர் R.மாசிலாமணி, முன்னாள் பொருளாதார துறை தலைவர் ஆகியோர் கருத்தரங்கு புத்தகத்தை வெளியிட்டனர். இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைசிறந்த 15 பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தின் பல்வேறு அம்சங்களில் தங்கள் நுண்ணறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திண்டுக்கல் காந்தி கிராம ஊரகப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், பொருளியல் துறை இணைப் பேராசிரியை டாக்டர் எஸ்.பார்வதி, முனைவர் பி.லோகநாதன் முதல்வர்(பொறுப்பு ), துறை தலைவர் (பொறுப்பு) முனைவர் கே.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
