ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர நிர்ணய குழுவினர் ஆய்வு
ஆய்வில் ஈடுபட்ட குழுவினர்
திருமயம்:அரிமளம் ஒன்றியம் கீழா நிலை புதுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 3 டாக்டர்கள் பணிபுரிகின்றனர். பத்து படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 300 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையத்துக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குதவற்காக தேசிய தர நிர்ணய குழுவை சேர்ந்த ஜோஸ்வா அபிஷேக் பந்தலா(ஆந்திரப்பி ரதேசம்), டாக்டர் ராஜேஸ்வர் தேபத்வார் (மகாராஷ்டிரா),ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.குழுவினரை சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் பழனி வேல்ராஜா தலைமையில் டாக்டர்கள் காவியா, ஜனனி ஐஸ்வர்யா ஆகியோர் சுகாதார நிலைய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மாவட்ட சுகாதார அலுவலக தர நிர்ணய மருத்துவ அலுவலர் பிரியங்கா, மாவட்ட பயிற்சி திட்ட மருத்துவ அலுவலர் நவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர். சுகாதார நிலையம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை குழுவினர் வழங்கினர்.