தேசிய மாணவர் படை துவக்க விழா - திருப்பத்தூரில் ரத்ததான முகாம்

தேசிய மாணவர் படை துவக்க விழா - திருப்பத்தூரில் ரத்ததான முகாம்
X

ரத்ததான முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 75வது தேசிய மாணவர் படை துவக்க விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவர் படை 75வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தேசியப்படை அலுவலர் சிவகுமார் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் தூய நெஞ்சக் கல்லூரி இல்ல தந்தை டாக்டர் பிரவீன் கலந்து கொண்டு ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார். தூய நெஞ்சக் கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த வங்கி வங்கி தலைமை மருத்துவர் குமரவேல், விழுதுகள் ரத்த தான இயக்கத்தைச் சேர்ந்த அமுதன், தரணி, வெங்கடேசன், ராகவன், திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story