தேசிய ஒற்றுமை தினம் - அரசு பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒற்றுமை தினம் - அரசு பள்ளியில் உறுதிமொழி ஏற்பு
X

உறுதிமொழி ஏற்பு 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் பாரதபிரதமர் சர்தார்வல்லபாய்பட்டேல் பிறந்ததினத்தினையொட்டி நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமையாசிரியை வசந்தாள் தலைமை வகித்து தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை வாசித்தார். கணித ஆசிரியர் முருகன் முன்னாள் பாரத பிரதமர் சர்தார் வல்லபாய்பட்டேல் வாழ்கை வரலாறுகள் பற்றி எடுத்துரைத்தார்.இதில் பள்ளி ஆசிரியர்கள் சித்ரா, சீனிவாசன்,ரமாமகேஸ்வரி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story