அரசு பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு

அரசு பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு

உறுதிமொழி ஏற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே அரசு பள்ளியில் தேசிய வாக்காளர் தினஉறுதிமொழியேற்பு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் பள்ளித்தலைமையாசிரியிர் இரா. முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் வாக்காளர் உறுதி மொழியினை வாசிக்க மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்றனர்.மேலும் வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எவ்வாறு வாக்காளர்களாக பதிவு செய்வது குறித்தும் விளக்கி பேசினார். அப்போது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் லட்சுமணன், சீனிவாசன், ராசாத்தி, பள்ளி ஆசிரியர்கள் ரமாமகேஸ்வரி,அனிதா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஸ்வேதா, மழலையர் பள்ளி ஆசிரியர் ஜெயந்தி, மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story