யுனிக் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா
குழு புகைப்படம்
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா கல்லூரியின் நிறுவனர் முனைவர் அருள் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏழு நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர் முனைவர் அருள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறைத் தலைவர் குபேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கிருஷ்ணகுமாரி சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் பெரியார் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படியும், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி காரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை, அரசு உயர்நிலைப் பள்ளி, கால்நடை மருத்துவமனை ஆகிய இடங்களில் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் சுற்று சுவர்களுக்கு வர்ணம் பூசினர். சாலை மற்றும் பொதுமக்களின் பயன்பாடுகளில் இருக்கும் இடங்களில் உள்ள முட்புதர்களை அகற்றினர். மாணவ, மாணவிகளின் சமூக பொது நலத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்கு அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். இந்நிகழ்வில் திட்ட ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறை மற்றும் தாவரவியல் துறைத் தலைவர் குபேந்திரன்,
திட்ட அலுவலர் உதவிப் பேராசிரியர் மோகனா ஆகியோர் பங்கேற்று விழாவின் முடிவில் தமிழ்த் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஸ்ரீவித்யா நன்றியுரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரியின் நிறுவனருடன் ஆர்வத்துடன் குழு படம் எடுத்துக்கொண்டனர்.