நாட்டரசன் கோட்டை : ஶ்ரீ சிவகாமி அம்மாள் வெள்ளி ரதத்தில் பவனி
ஶ்ரீ சிவகாமி அம்மாள்
நாட்டரசன் கோட்டையில் ஶ்ரீ சிவகாமி அம்மாள் வெள்ளி ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் மின் ரத திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சிவகாமி அம்மனை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர தீபம், கும்ப தீபம், நாகதீபம் மற்றும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து பக்தர்கள் அருள் பாலித்தார். மின்னொழியில் வெள்ளி ரதத்தில் பவனி வந்த சிவகாமி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
Next Story