செங்கல்பட்டில் இயற்கை மருத்துவக் கண்காட்சி

செங்கல்பட்டில் இயற்கை மருத்துவக் கண்காட்சி
X
 இயற்கை மருத்துவக் கண்காட்சி
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அருகே சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் சாா்பில், இயற்கை மருத்துவக் கண்காட்சி, மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவக் கண்காட்சி, மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் மைதிலி கே.ராஜேந்திரன் தொடங்கி வைத்து கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டனா். நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங், இணை இயக்குநா் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) என்.மணவாளன், சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன இயக்குநா் (பொ) வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அரசு உயா் அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story