நத்தம் பகுதியில் காணாமல் போகும் இயற்கை எழில் வளங்கள்
கொள்ளையடிக்கப்பட்ட வழங்கல்
நத்தம் பகுதி மலைகளின் மாணிக்கமாக விளங்கும் பகுதியாகும். இங்கு மா,பலா, வாழையென முக்கனிகள் விளைந்து விவசாயத்தில் முத்திரை பதித்து வருகிறது. ஆனால் சமீப காலமாக கனிம வளங்களை திருடும் கொள்ளை கும்பல் இரவு பகல் பாராமல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது.
கனிம வளங்கள் எக்கேடுகெட்டு போனால் என்ன அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.இந்நிலையில் தூங்கிய அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு கண்துடைப்புக்காக கருங்கல் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்தனர்.கனிமவள கடத்தல் விவகாரம் போலீசார் காட்டிலும் வசூல் மழையை பொழியை வைத்துள்ளது.
பின்பு அதிகாரிகள் விடுவார்களா, அவர்களும் கனிம கடத்தலில் கச்சிதமாக கமிஷன் காரியத்தை முடித்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கை கோர்த்து இருப்பதால் நத்தம் பகுதியில் தொடர்ந்து கனிம வளங்கள் காணாமல் போவது வாடிக்கையாக உள்ளது.