திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் 2வது நாள் நாட்டியாஞ்சலி விழா

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் 2வது நாள் நாட்டியாஞ்சலி விழா

நாட்டியாஞ்சலி விழா

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் 2வது நாள் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 2வத நாள் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளி மாணவர்கள் பங்கேற்று நாட்டிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். கர்நாடக மங்கள இசையுடன் துவங்கிய நிகழ்வில் பல நாட்டிய பள்ளி மாணவர்கள் பரதம், காவடி, குச்சிபுடி ஆகிய நடன கலைகளை ஆடியது அங்கிருந்த பார்வையாளர்களை கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. ஏராளமானோர் ஆர்வமுடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

Tags

Next Story