நவராத்திரி கொலு வழிபாடு - ஏராளமானோர் பங்கேற்பு
ராசிபுரம் மகளிர் சகஸ்ரநாமக் குழுவினரின் சார்பில் நவராத்திரி கொலு வழிபாடு மற்றும் கண்காட்சி ராசிபுரத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரி விழா துர்கா, சரஸ்வதி, லட்சுமி தெய்வங்களுக்கு கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் நாள்தோறும் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொலு வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். ராசிபுரம் மகளிர் சகஸ்ர நாமக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற 4-ம் நாள் நிகழ்ச்சியில் லலிதா சகஸ்ரநாமம் பூஜையுடன், கொலு வழிபாடு நடத்தப்பட்டது.
கண்காட்சியில் பெண்கள் திரளாகப் பங்கேற்று தெய்வீகப் பாடல்கள் பாடி வழிபாடுகள் நடத்தினர். மேலும், பல்வேரு உருவங்களுடன் வைக்கப்பட்ட கொலுவினை பலரும் பார்த்து வழிபட்டனர். இதில் ராசிபுரம் மகளிர் சகஸ்ரநாமக் குழுவை சேர்ந்த கல்யாணி சீனிவாசன், தேவயானி ராமசாமி, ஸ்ரீவித்யா முரளி, லதா ரமேஷ், சாந்தி ஆனந்தன், ராதா நாகராஜன், மகாலட்சுமி முகேஷ், இந்துமதி ஜெகநாதன், பார்வதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.