நவோதயா அகாடமி பள்ளி சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை !

நவோதயா அகாடமி பள்ளி சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை !

நவோதயா அகாடமி

நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளி மாணவ, மாணவியர்கள் சி.பி.எஸ்.இ, பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாராட்டு:

நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று காலை நடந்து முடிந்த சி.பி.எஸ.;இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து கூறி பாராட்டினார்கள். பள்ளி முதல்வர் ஆண்டனிராஜ் அவர்கள் பேசும் போது, மதிப்பெண்ணை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பல்வேறு திறமைகளை உருவாக்கும் மாணவச்செல்வங்களை உருவாக்குவதே எங்கள் நவோதயா பள்ளியின் கொள்கை என்றுகூறி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை வாழ்த்து கூறி பாராட்டினார்.

பள்ளியின் நிர்வாகி தேனருவி அவர்கள் பேசுகையில், நாங்கள் ஒழுக்கமானரூபவ் திறமையான, மாணவர்களை உருவாக்குவதே எங்கள் இலட்சியம் என்றும் மாணவர்கள் திறமையாக முதல் மதிப்பெண் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் கூறினார்.

சிபிஎஸ்இ பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் புனித் 496 முதல் இடத்தையும் தீப்சிகா 480 இரண்டாம் இடத்தையும், பெற்றுள்ளார்கள். மற்றும் நிதிக் 478 மதிப்பெண்கள் கிருத்திகா 478 மதிப்பெண்கள் அஸ்வினி ௪௭௮ மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்கள்.

சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்னிபிரியா முதல் இடத்தையும், கோஹர்சனா 472 , சன்யுக்தா 472, இரண்டாம் இடத்தையும், நவீனா 469, தேஜாஸ்ரீ 469 மதிப்பெண்களை எடுத்து மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்கள். அனைவரையும் பள்ளி நிர்வாகத்தினர்ரூபவ் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கூறி பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவாக அனைவரும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story