மாநில அளவில் நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் நவோதயா அகாடமி பள்ளி மாணவி கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை !!

மாநில அளவில் நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் நவோதயா அகாடமி பள்ளி மாணவி கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை !!

Navodaya Academy school 

மாநில அளவில் நடந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் நவோதயா அகாடமி பள்ளி மாணவி கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் நவோதயா அகாடமி பள்ளி மாணவி கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மாதம் நடைபெற்றது, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்து 4.10.2024 முதல் 10.10.2024 வரை சென்னையில் மாநில அளவில் போட்டிகள் நடைபெற்றது.

அதில் நமது நவோதயா அகாடமி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி பிரபஞ்சனா அவர்கள் கலந்துகொண்டு நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு முதல்பரிசினைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு மேம்பாடு ஆணையத்தின் சார்பாகவும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாகவும் தங்கமெடல் மற்றும் சான்றிதழ் மேலும் ரூபாய் 75,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. இன்று பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில் செல்வி பிரபஞ்சனாவிற்கு மெடல், சான்றிதழ், பாரட்டுத்தொகை வழங்கப்பட்டது. பள்ளியின் செயலாளர், பொருளாளர், முதல்வர், ஆசிரியர்கள் சகமாணவ, மாணவியர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

பள்ளியின் பொருளாளர் கா.தேனருவி அவர்கள் பேசுகையில் மாணவி பிரபஞ்சனா படிப்பிலும், விளையாட்டிலும் முழக்கவனத்தோடும் பொறுப்புடனும் செயல்படுகின்றார். ஆசிரியர்களிடத்திலும் சகமாணவ மாணவியர்களிடத்திலும் அன்பாகவும், ஒழுக்கமாகவும் நற்பண்புகளுடன் பழகும் பழக்கம் கொண்டவர், மேலும் இந்தியா நாட்டிற்காக விளையாடி வெற்றி பெற வேண்டும், விளையாட்டுத்துறையில் தேசிய அளவில் மிகப்பெரிய சாதனையை படைக்கவேண்டும் என்றும் அவருடைய வெற்றிக்கு துணையாக இருக்கும் அவர்களுடைய பெற்றோர்களையும் வாழ்த்திப் பாரட்டினார்.

Tags

Next Story