நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பட்டமளிப்பு விழா !

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பட்டமளிப்பு விழா !

பட்டமளிப்பு விழா 

நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 27.03.2024 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் மழலையர் பள்ளி (U.K.G) முடித்து துவக்க பள்ளியில் (GRADE – I) சேரும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்த வழக்கறிஞர் திருமதி. ரீனா கிருஸ்டினா அவர்களும் பல் மருத்துவர் திருமதி. சித்ரா அவர்களும் கலந்து கொண்டனர். பள்ளியின் பொருளாளர் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். KG மாணவர்களில் வரவேற்பு நடனத்தோடு நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு விருந்தினர் திருமதி. ரீனா கிருஸ்டினா அவர்கள் பேசும்பொழுது “நாளைய தலைமுறைகளுக்கு தேவையான கல்வியை இன்று உணர்ந்து வழங்க வேண்டும்” என்று கூறினார். சிறப்பு விருந்தினர் திருமதி. சித்ரா பல் மருத்துவர் அவர்கள் பேசும்பொழுது “பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பல் மருத்துவம் பராமரிப்பில் முழுமையான அக்கறையும், விழிப்புணர்வும் வேண்டும்”;. குழந்தைகளுக்கு ஏற்படும் பல் மருத்துவம் தொடர்பான பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறினார். பள்ளியின் பொருளாளர் பேசுகையில் “குழந்தைகளுக்கு தேவையான ஒழுக்கம் நிறைந்த கல்வியை கற்றுத் தருகிறோம். அவர்களுடைய தேவைகளை அவர்களே செய்து கொள்ளும் வகையில் நிறைய பயிற்சிகளை வழங்கி வருகிறோம”;. குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அனைத்து குழந்தைசெல்வங்களின் தனித்திறனை வெளிகொண்டு வரும் பயிற்சியினை அளித்து வருகிறோம். எதிர்காலத்திற்கு தேவையான கல்வி முறையை இன்றே நாங்கள் வழங்கி வருகிறோம் என்று கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக UKG தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் Prekg, LKG மாணவர்களுக்கும் நினைவு கேடயம் வழங்கப்பட்டு அனைத்து மாணவர்களுடனும் சிறப்பு விருந்தினர், பள்ளியின் பொருளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story