நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மகளிர் தினம்
நாமக்கல்லில் உள்ள தி நவோதயா அகாடமி சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று காலை 10.00 மணியளவில் சர்வதேச மகளிர்தின விழா தொடங்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் அனைவரும் தலைமையேற்று விழாவை தொடங்கி வைத்தனர். இவ்விழாவிற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளி முதல்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மகளிர்தினத்தின் முக்கியத்துவம் குறித்து மகளிரின் மேன்மைகள் குறித்தும் மாணவர்களும், ஆசிரியர்களும் உரையாற்றினார்கள். மகளிர்கள் அனைவரும் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு பல போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மகளிர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடியும், பாடல்கள் பாடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். மகளிர் தினம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் பொருளாளர் பேசுகையில் மகளிரின் மேன்மைக்கும்ரூபவ் உயர்வுக்கும் கல்வியே சிறந்த ஆயுதம் என்று கூறினார். எனவே மகளிர் அனைவரும் உயர்ந்த கல்வி கற்று நாடும் வீடும் போற்றும் வகையில் உயர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். நிகழ்ச்சியின் நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் மற்றும் அனைத்து மகளிருக்கும் நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மதியம் 1.00 மணியளவில் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டியும், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டும் மகிழ்ச்சியாக மகளிர் தினத்தை கொண்டாடி நிறைவு செய்தனர்.