தென் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் நவோதயா பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதனை | KING NEWS 24X7

Navodaya Academy Senior Secondary
பிப்ரவரி 14. நாமக்கல் Navodaya Academy Senior Secondary பள்ளியில் 4ஆம் வகுப்ப படிக்கும் LOIT V.லக்ஷனா வர்ஷினி அவர்கள் தென்னிந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
Toko Kai Karate டு பயிற்சி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 9.ஆம் தேதி ஈரோடு வெள்ளாளர் CBSC பள்ளியில் தென்னிந்திய அளவில் கராத்தே போட்டியினை நடத்தியது. அதில் நமது நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி செல்வி V.லக்ஷனா வர்ஷினி (4ஆம் வகுப்பு) அவர்கள் கலந்துகொண்டு சிறுவர்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இன்று காலை பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் அவருக்கு சான்றிதழ் மற்றும் மெடல்களை "பள்ளியின் பொருளாளர் திரு. கா தேனருவி அவர்கள் வழங்கினார். அவர் பேசுகையில் கராத்தே என்பது ஒரு தற்காப்புக் கலை அதனை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் அதிகம் கற்றுக்கொள்ள முன் வர வேண்டும். விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் முழுமையாக கராத்தே பயிற்சியை கற்றால் இந்திய அளவிலும், உலக அளவிலும் நீங்கள் போராடும் புகழோடும் V. லக்ஷனா வாஷினியைப் போல் வாழலாம் என்று கூறி பாராட்டினார்" ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர் பெருமக்கள், சகமாணவ மாணவியர்கள் கைதட்டி தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.