திருவண்ணாமலையில் நவாப் வணிக வளாகம்:அமைச்சர் திறந்து வைப்பு
திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெருவில் நவாப் சந்தா மியான் மஸ்ஜித் நிர்வாகத்துக்குட்பட்ட நவாப் வணிக வளாகம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா தொழிலதிபர் எம்.இ.ஜமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் ப.அப்துல்சமது எம்எல்ஏ, கே.நவாஸ்கனி எம்பி ஆகியோர் முன்னிலை வகிக்க நவாப் சந்தா மியான் மஸ்ஜித் நிர்வாக தலைவர் நாசர் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோர் நவாப் வணிக வளாகத்தை திறந்து வைத்தனர்.
இதில் நவாப் சந்தா மியான் மஸ்ஜித் நிர்வாகத்தை சேர்ந்த நிர்வாகிகள் முஸ்லீம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நவாப்சந்தாமியான் பள்ளிவாசல் நிர்வாகக்குழு உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளருமான ஏ.டபிள்யு.சர்தார்காசீம் நன்றி கூறினார்.