ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நவாஸ் கனி வெற்றி

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்  நவாஸ் கனி வெற்றி

நவாஸ் கனி

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் செய்தியாளிடம் தெரிவிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டம் மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் தொகுதி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலிலும் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள சுயேட்சை வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர் ஆகியோரோடு போட்டியிட்டு, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இதன் மூலம் மக்கள் அமைதியை விரும்புகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. மேலும் ஜாதியின் மூலம் வாக்குகளை பெற்று விடலாம், மதத்தின் மூலம் வாக்குகளை பெற்று விடலாம் என்று நினைப்பவர்களுக்கு மக்கள் நல்ல தீர்ப்பாக இந்த வெற்றியை எனக்கு அளித்துள்ளனர். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சி ரீதியில் நின்றும் வெற்றி பெறலாம் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. அரசின் சாதனை திட்டங்களை கூறித்தான் வாக்குகள் சேகரித்தேன்.

திமுக அரசின் திட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் என்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

Tags

Next Story