நாசரேத் நகர பாஜக தலைவர் ராஜினாமா!

நாசரேத் நகர பாஜக தலைவர் ராஜினாமா!

பார்த்தசாரதி 

நாசரேத் நகர பாஜக தலைவர் பார்த்தசாரதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நாசரேத் நகர பாஜக தலைவர் என். பார்த்தசாரதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாசரேத் நகர பாஜக தலைவராக இதுவரை பணி செய்து வந்த எனக்கு ஆதரவு அளித்த பாஜக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் எனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக என்னால் இந்த பதவியை தொடர்ந்து வகிக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொண்டு பாஜக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், நகர தலைவர்பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். இதுவரை ஆதரவளித்த பாஜக உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story