பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி தலைவர்கள் பிரசாரம்
பிரசார பொதுக்கூட்டம்
பாமக வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது ஒட்டி,விக்கிரவாண்டி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் பச்சமுத்து பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story